இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலமானார்
மலையக அரசியலின் மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம் தனது 79ஆவது வயதில் காலமானார்.
இன்று(22) அதிகாலை அவரது இல்லத்தில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் மிக நீண்ட அங்கத்துவத்தை கொண்டிருந்த இவர், மறைந்த முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வந்துள்ளார்
அரசியல் பணி
1994-2015 வரையான காலப்பகுதியில் தனது நாடாளுமன்ற அங்கத்துவதை பெற்றிருந்ததோடு, பொருளாதார அபிவிருத்தி, சிறு மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
இவருடைய நாடாளுமன்ற அங்கத்துவ காலப்பகுதியில் “1962 முதல் தொழிற்சங்க அரசியல் பணி பொதுக் கணக்குக் குழுவில்உள்ள குழுக்கள் மனுக்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
தொடர்பான ஆலோசனைக் குழு நிர்மாணம், பொறியியல் சேவைகள்,
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் தொடர்பான பொருளாதார அபிவிருத்தி ஆலோசனைக் குழு சுதேச மருத்துவம் தொடர்பான
ஆலோசனைக் குழு சமூக சேவைகள் தொடர்பான ஆலோசனைக் குழு, தென்னை அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைக் குழு
மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைக் குழு, முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான ஆலோசனைக் குழு,
இலங்கை மக்களை ஒரே தேசமாக வாழ அதிகாரமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் குறித்து
சிபாரிசு செய்வதற்கும் அறிக்கை செய்வதற்கும் நாடாளுமன்றத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் குழு, 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவினத் தலைவர்கள்,
மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் தொடர்பான ஆலோசனைக் குழு, சமூக சேவைகள், நலன்புரி மற்றும்
கால்நடை அபிவிருத்தி ”போன்ற அரசியல் செயற்குழுக்களின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.