பிரித்தானியா பறந்தார் மதபோதகர் ஜெரோம் பெர்ணாண்டோ
மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ இங்கிலாந்து சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் இங்கிலாந்தில் ஆராதனை நிகழ்வொன்றை நடத்தவுள்ளார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை பேச்சாளர்,
காவல்துறை ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
போதகருக்கு எதிரான பயணத்தடையை குடிவரவு துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். குடிவரவுதுறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கவேண்டும்,இலங்கைக்கு அவர் திரும்பினால் அவரை கைது செய்து சிஐடியினரிடம் ஒப்படைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜெரோம் பெர்ணாண்டோ மீது
முன்வைக்கப்பட்ட மத துன்புறுத்தல் எனும் விடயத்தை சுட்டிக்காட்டி அவரால் பிரித்தானியாவில் இலகுவாக
புகலிடம் கோர முடியுமென நிஹால் தல்துவ மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்