அனுரவை தொடர்ந்து இந்தியா செல்லும் மற்றுமொரு எம்.பி
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்ட நிலையிலேயே, பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க
இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த அறிஞர் மாநாட்டில் பாட்டலி சம்பிக்க ரணவக்க உரையாற்றவுள்ளார்.
இதனை தொடர்ந்து, புது டெல்லியில் அவர் சில நாட்கள் தங்கியிருந்து இந்தியாவின் சில முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கான அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது பாட்டலி சம்பிக்க ரணவக்க குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
