செல்வச் சந்நிதியில் இருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரை - பக்தர்களை நெகிழவைத்த இராணுவம் (படங்கள்)
கதிர்காமம் பாதயாத்திரை
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் இன்றைய தினம் இயக்கச்சியை வந்தடைந்தனர்.
வருடந்தோறும் பாதயாத்திரையாகச் செல்லுகின்ற பக்தர்கள் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள கோவில்கள், மண்டபங்கள் பொது இடங்களில் தங்கி தமது வழிபாடுகளை மேற்கொண்டு கதிர்காமத்தை சென்றடைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த 53 பக்தர்கள் இன்றைய தினம் இயக்கச்சியில் அமைந்துள்ள இராணுவத்தின் 552 இரண்டாவது படைப்பிரிவின் தலைமையகத்தில் தங்கிச் சென்றனர்.
பக்தர்களை நெகிழவைத்த இராணுவம்
இதன்போது பக்தர்களுக்கு தேவையான விருந்துபசாரம் இராணுவத்தினரால் அளிக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட நேரம் தங்கி தமது பாதையாத்திரையை மீண்டும் ஆரம்பித்தனர்.
இதன்போது சிலருக்கு முதலுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத்தினர் பக்தர்களுக்கு விருந்துபசாரம் வழங்கியமை இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான விடயம் என பக்தர்கள் தெரிவித்தனர்.