அஸ்வெசும - முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Sathangani
அஸ்வெசும உதவித்தொகை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களுக்கான மாதாந்த உதவித்தொகை குறித்து தேசிய முதியோர் செயலகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த கொடுப்பனவுகளை இன்று (09) முதல் பெற்றுக்கொள்ளலாம் என தேசிய முதியோர் செயலகத்தின் இயக்குநர் கே. சதுர மிஹிடும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பயனாளிகள் இந்த நிதியைத் தங்களின் உள்ளூர் தபால் நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்படும்
கொடுப்பனவு பெறும் முதியவர்களுக்காக இன்று முதல் ஏப்ரல் 11 வரை பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 2026 முதல் பயனாளிகளுக்கான அனைத்து உதவித்தொகைகளும் வங்கிக் கணக்குகள் மூலமாக மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |