முச்சக்கரவண்டி பயணத்தை தவிர்க்கும் மக்கள் - வெளியானது காரணம்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகரித்த கட்டண அறவீடு காரணமாக பொது மக்கள் முச்சக்கரவண்டி பயணத்தில் இருந்து விலகுவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
சில முச்சக்கரவண்டி சாரதிகள் மோசடியான முறையில் பொதுமக்களிடம் கட்டணங்களை அறவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி கட்டண அறவீடு தொடர்பில் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். மக்கள் முச்சக்கரவண்டிகளை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
காரணம், எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் அதிக அளவில் முச்சக்கரவண்டி கட்டணங்களை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டி சாரதிகள் தன்னிச்சையாக மற்றும் மோசடியான முறையில் பயணிகளிடம் அதிக அளவில் பணம் அறவிடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்