பறிபோகும் தமிழர் நிலம்! தொடர் போராட்டத்திற்கு அழைப்பு

Sri Lankan Tamils Vavuniya
By Kiruththikan Sep 21, 2022 09:14 AM GMT
Report

போராட்டம்

குருந்தூர் மலையிலே தண்ணிமுறிப்பு பகுதியிலே 632 ஏக்கர் நிலங்களை தொல்லியல் திணைக்களம் எந்தவித சட்டபூர்வமான ஏற்பாடுகளும் இன்றி அபகரிப்பதற்கு எதிரான போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இன்றையதினம் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற தொடர் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தந்துதவுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

குருந்தூர் மலையிலே தண்ணிமுறிப்பு பகுதியிலே 632 ஏக்கர் நிலங்களை தொல்லியல் திணைக்களம் எந்தவித சட்டபூர்வமான ஏற்பாடுகளும் இன்றி அபகரித்து தமிழர் தாயகத்தை கூறு போடுகின்ற செயற்பாட்டுக்கு எதிராக கிராம மக்கள், கிராம பொது அமைப்புக்கள் இன்றையதினம் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற தொடர் போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தன்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து நிற்கின்றது.

பறிபோகும் தமிழர் நிலம்! தொடர் போராட்டத்திற்கு அழைப்பு | People S Uprising Movement From Pothu To Polikandi

காலங்காலமாக மரபு வழியாக நாங்கள் வாழ்ந்து வந்திருக்கக்கூடிய எங்களுடைய தாயகம், வடக்கு-கிழக்கு இணைந்த எங்களுடைய தாயகத்தை கூறு போடுகின்ற முயற்சியாக வடக்கு கிழக்கின் எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய முல்லைத்தீவு குருந்தூர் மலை, குமிழமுனை தண்ணிமுறிப்பு பிரதேசம்.

அங்கு இருக்கும் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை முற்றுமாக அகற்றி, பௌத்த விகாரையை நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பணியை நிறைவு செய்யக்கூடிய நிலையில், தொல்லியல் திணைக்களம் இரவோடிரவாக கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், விவசாயத் திணைக்களம் போன்ற எந்த ஒரு திணைக்களங்களின் அனுமதியும் இல்லாமல் களவாக தொல்லியல் திணைக்களம் 632 ஏக்கர் நிலத்தை எடுத்திருக்கின்றது. தொல்லியல் திணைக்களம் என்ற போர்வையிலே தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்யப்படுவதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நில உரிமை, மத வழிபாட்டு சுதந்திரம் என்பன முற்றாக மறுக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நிலையில் நீண்ட காலமாக குருந்தூர்மலை விவகாரம் மதவழிபாட்டு சுதந்திரத்தை பாதிக்கக்கூடிய விதத்திலே ஈடுபட்டு வருவதும், நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கி இருக்கக்கூடிய நிலையிலே மீண்டும் மீண்டும் அவற்றை மீறி அந்த அநீதியை இழைக்கின்ற இந்த செயற்பாட்டை தமிழர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்களுடைய தாயக விடுதலைக்காக எத்தனையோ இன்னுயிர்கள் தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன. எத்தனையோ அர்ப்பணிப்புக்கள் எல்லாம் இந்த மண்ணிலே நடைபெற்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே எங்களது தாயகத்தை கூறு போடுகின்ற, வடக்கு-கிழக்கை பிரிக்கின்ற, நிலத்தொடர்பை இல்லாமல் செய்கின்ற, இனப்பரம்பலை மாற்றுகின்ற எந்த ஒரு செயற்பாட்டிற்கும் ஒவ்வொரு ஈழத் தமிழனும் அனுமதிக்க முடியாது.

இதனை முற்று முழுதாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். அதற்காக கட்சி பேதமின்றி, அமைப்புகள் பேதமின்றி, மத பேதமின்றி அனைவரும் தமிழர்களாக இன்றைய தினம் காலை 9 மணிக்கு இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அனைத்து உறவுகளையும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புடன் அழைத்து நிற்கின்றது. நாங்கள் அனைவரும் தமிழர்களாக இங்கே ஒன்று திரளுவோம்.

எங்களுடைய நிலத்தை நாங்களே ஆளக்கூடிய உரிமையை வெல்வதற்கு எங்களுடைய நிலங்களை பாதுகாக்க வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று திரளுவோம் என இந்த சந்தர்ப்பத்திலே அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம். அதுமட்டுமன்றி சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட்டு அழுத்தத்தைப் பிரயோகித்து, இவ்வாறான நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தமிழர் தாயகத்திலே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கு சர்வதேசமும் அனைத்து சர்வதேச அமைப்புக்களும், நாடுகளும் அழுத்தத்தை சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு கொடுத்து உடனடியாக நிறுத்த வேண்டும். சிங்களபௌத்த பேரினவாதத்தை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்த்து கடந்த 75 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையிலே, எங்களுடைய மக்கள் விழிப்படைய வேண்டும்.

எங்களுடைய மக்கள் உண்மையை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இதற்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் எங்களுடைய இனத்தினுடைய விடுதலையும், எங்களுடைய தாயகத்திலேயே நாங்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடிய சுதந்திர தேசம் மலருகின்ற நிலையும் ஏற்படும்.

ஆகவே இன்றைய தினம் குருந்தூர் மலை தண்ணீர் முறிப்பு பகுதியில் நடைபெற இருக்கின்ற தொடர் போராட்டத்திற்கு அனைத்து உறவுகளும் முழுமையான ஆதரவை தெரிவித்து இங்கு வருகை தந்து போராட்டத்தில் பங்கெடுத்து எங்களுடைய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று அனைவரையும் நாங்கள் அன்புரிமையோடு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வேண்டி நிற்கின்றது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011