காலைவேளை பாடசாலை சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட நிலை
துவிச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காலைவேளை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு வயது மாணவனின் ஒருபக்க காலணியை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளதாக அங்குருவத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
அங்குருவத்தோட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட தொம்பகொட பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் நேற்று (16) காலை 7.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர் ஒருவர். அந்த மாணவனை பின்தொடர்ந்து சைக்கிளில் சென்று மாணவனை பிடித்து இழுத்து பலவந்தமாக காலணியை பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது .
தந்தைக்கு அழைப்பை ஏற்படுத்திய மாணவன்
இதன் பின், மாணவன் அருகில் உள்ள கடைக்கு சென்று அங்கிருந்து தன் தந்தைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கே வந்த தந்தை சம்பவம் குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். அங்குருவத்தோட்ட காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
