வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து..! மல்லாவியில் ஒருவர் படுகாயம்
CID - Sri Lanka Police
Sri Lankan Tamils
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கத்திக் குத்து
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் ஒருவர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளார்.
நேற்று இரவு இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து குறித்த கத்தி குத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்திகுத்துக்கு இலக்காகிய நபர் படுகாயம் அடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
42 அகவை உடைய குடும்பஸ்தர் கைது
சம்பவத்தில் கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த 33 அகவை உடைய குலேந்திரதாஸ் விஜயதாஸ் என்ற நபரே படுகாயம் அடைந்தவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 42 அகவை உடைய குடும்பஸ்தர் ஒருவர் மல்லாவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி