நாமல் ராஜபக்சவிற்கு பிணை வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிரிஷ் உடன்படிக்கை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை ஆணைக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவைப் பரிசீலிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவை நாளையதினம் (13) மீண்டும் கூட்டுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
கிரிஷ் உடன்படிக்கை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 3ஆம் திகதி பிணை வழங்கியது.
இலஞ்சம் ஆணைக்குழு சீராய்வு மனு தாக்கல்
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிணை ஆணையை ரத்து செய்யக் கோரியும், நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்கக் கோரியும் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்கவின் முன் சீராய்வு மனுக்கள் அழைக்கப்பட்டபோது, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான உதவிப் பணிப்பாளர் (சட்டம்) தனுஜ பண்டார, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்தார்.
மனு மீதான பரிசீலனையை நாளை (13) மீண்டும் அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |