இலாபத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் -குறையவுள்ள எரிபொருள் விலைகள்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
By Sumithiran
கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் கூட்டுத்தாபனம் செயற்படவுள்ளதோடு எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகளை தவிர்க்கும் திறன்
இந்த இலாபத்தை பெறுவதற்கு திறமையின்மை மற்றும் முறைகேடுகளை தவிர்க்கும் திறனே முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
