கருணாவை போல பிள்ளையானை காப்பாற்றும் திட்டம் அம்பலம்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை பெரும் பேசுபொருளாக இருந்த சில விடயங்கள் எந்த வித தீர்வுகளுமின்றி கிடப்பில் போடப்பட்டள்ளது பிள்ளையான் (Pikkayan) விவகாரம் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருந்த நிலையில் அது மறந்து போன பேசுபொருளாக மாறியிருக்கிறது.
முன்பு மைத்திரி ஆட்சிக்காலத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு குறித்த வழக்கு நீத்துப்போக செய்யப்பட்டு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார்.
இப்போது கைது செய்யப்பட்டு மீள கிழக்கின் முதலமைச்சராக்கப்பட நகர்வுகளை மேற்கொள்கிறதா சிங்கள தேசத்தின் பிள்ளையான் விசுவாசத்தரப்பு என்ற கேள்வி எழுகிறது.
அதேபோல தான் சிறுமி அம்சிக்காவின் மரண விசாரணையும் கூட சிறுமி உயிரிழந்தும் ஒரு நீதியற்று நகர்கிறது.
இப்படிப்பட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்க வயல்வேலைகள் செய்த விவசாயிகள் சிறையிலடைக்கப்படுவதும் யுத்த குற்றவாளிகள் தேசியவீரர்களாக காட்சிப்படுத்தப்படும் நிலையே இன்று இலங்கையில் காணப்படுகிறது.
இதுவிடையம் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
