பிரதமர் மோடி பகிர்ந்த காணொளி :24 மணிநேரத்தில் படைத்த உலகசாதனை
இந்திய பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காணொளி 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வையாளர்களைக் கடந்து உலக சாதனை படைத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தகாணாளியே, 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைக் கடந்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறது. அதுமட்டுமின்றி 1 கோடியே 60 லட்சம் பேர் லைக் செய்து இருக்கின்றனர்.
வரலாற்றில் ஒரே நாளில் அதிகப்படியான பார்வை
வரலாற்றில் ஒரே நாளில் அதிகப்படியான பார்வைகளை பெற்ற காணொளி என்ற பெருமையை இந்த ரீல்ஸ் தட்டி சென்றது. பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட், உலகக்கோப்பையின் போது பிடிஎஸ் குழுவை சந்தித்த போது பதிவிட்ட காணொளி 24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகளைப் பெற்றதே உலக சாதனையாக இருந்தது.
தற்போது பிரதமர் மோடியின் இந்த ரீல்ஸ் காணொளி அந்த சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. ''நான் பதிவிட்ட காணொளிக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது; ஆலோசனைகளை வழங்கிய இளம் நண்பர்களுக்கு நன்றி '' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |