நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு : வெளியான அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் நடைமுறையில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறைமா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்திய காவல்துறைமா அதிபர், “இப்போது தேர்தலுக்குப் பிந்தைய காலம் தொடங்குகிறது. ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.
விசேட பாதுகாப்பு
எனவே, இந்த காலகட்டத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட காவல்துறை பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்தப் பகுதியிலும் வன்முறை எதுவும் பதிவாகவில்லை.
இதுவரை கைது செய்யப்பட்ட 581 பேரில் 18 வேட்பாளர்கள் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆதரவாளர்கள்." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |