பொதுமக்களிடம் காவல்துறை விடுத்த முக்கிய கோரிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்பும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல் நிலைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப காவல்துறையினர் முயன்ற போது பொதுமக்களிடமிருந்து இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவித்த அவர் காவல்துறைக்கு எரிபொருள் கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.
கலவரங்களைத் தடுப்பது
கலவரங்களைத் தடுப்பது, குற்றவாளிகளைக் கைது செய்தல், போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், போக்குவரத்து ஒருங்கிணைப்பு போன்ற கடமைகளை நிறைவேற்ற வேண்டுமானால் காவல்துறைக்கு எவ்வித இடையூறும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி