பொங்கலுக்கு மற்றுமொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - மனோவிடம் ரணில் உறுதியளிப்பு

Dinesh Gunawardena Douglas Devananda Mano Ganeshan Ranil Wickremesinghe
By Jaso Oct 25, 2022 05:54 PM GMT
Report

பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிபர் செயலகத்தில், அதிபர் ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பிக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் காவல்துறை பதிவு பற்றியும் உரையாடினோம்.

சமாதான காலத்தில் காவல்துறை பதிவு ஏன்

பொங்கலுக்கு மற்றுமொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - மனோவிடம் ரணில் உறுதியளிப்பு | Political Prisoners Released For Pongal

இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று காவல்துறை பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன். தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். காவல்துறை பதிவு பற்றி காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுப்பதாக அதிபர் சொன்னார்.

பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகள் விடுதலை

பொங்கலுக்கு மற்றுமொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - மனோவிடம் ரணில் உறுதியளிப்பு | Political Prisoners Released For Pongal

நேற்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாக அதிபர் மேலும் சொன்னார். அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பிக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோரும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றி சாதகமாக கருத்து பகிர்ந்தனர். இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகள், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளாக (Confidence Building Measures) கருதப்படும் என நான் அதிபரிடம் கூறினேன். இவற்றை தொடர்ந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.

அரகல கிளர்ச்சி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு 

பொங்கலுக்கு மற்றுமொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - மனோவிடம் ரணில் உறுதியளிப்பு | Political Prisoners Released For Pongal

அரகல கிளர்ச்சி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை தொடர்பில் கைதாகி உள்ளோர் தொடர்பில் தயக்கம் இருப்பதாக அதிபர் மற்றும் அரசு தரப்பினர் கருத்துகளில் இருந்து தெரிய வந்தது. அவர்களையும் விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையாவது இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால், தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என நான் அதிபரிடம் கூறினேன்.

ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் பிரச்சினை விசேடமாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சாதகமான எண்ணப்பாடு இன்று நிலவுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பி சாகல ரத்னாயக்க ஆகியோரும் கூறினர்.

மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி அதிபர் அறிந்திருந்தார். பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 விகித உணவின்மை பிரச்சினையும், இதையடுத்தே, நகரங்களில் 43 விகிதமும், கிராமங்களில் 34 விகிதமும் உணவு பாதுகாப்பின்மை இருப்பதாக ஐநா நிறுவனங்கள் கண்டறிந்து கூறி இருப்பதை நான் அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க விசேட ஒதுக்கீட்டு திட்டம் ஒன்றையும், அவற்றை ஆராய அதிபர் செயலணி ஒன்றை அமைக்கவும் கோரினேன் என மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026