பாதாள உலக குழுக்களுடன் நேரடி தொடர்பில் அரசியல்வாதிகள் : அம்பலமாகப்போகும் பெயர்கள்
பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை வைத்துள்ள அரசியல்வாதிகளை புலனாய்வு சேவைகள் கண்டுபிடித்துள்ளதாகவும், காவல்துறை விசாரணைகளுக்குப் பின்னர் அத்தகைய அரசியல்வாதிகளின் பெயர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(ananda wijepala) தெரிவித்தார்.
புலனாய்வு அறிக்கைகளின்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) ஆகியவற்றின் முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மற்றும் தற்போதைய மாகாண அரசியல்வாதிகள், 10 சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணுவதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில்,இன்று செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை குழுக்கள்
இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதாள உலகத்துடனான அரசியல் தொடர்புகள் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் வெளிப்படுத்துவதாகவும அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
