மொத்த இளைஞர் சமுதாயத்துக்கே பேரிடி! ஆத்தரத்தில் நாமல்
அரசாங்கம் தேசிய இளைஞர் சேவைகள் சபையை (National Youth Services Council - NYSC) அரசியலாக்கிவிட்டதாகவும், சுதந்திரமான இளைஞர் செயற்பாட்டை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
களுத்துறை மாவட்ட இளைஞர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பூர்ண சத்யஜித் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, எக்ஸ் வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், இந்த கைது தெளிவான ஒடுக்குமுறை நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் சபையை அரசியலாக்குவது, நாட்டிலுள்ள மொத்த இளைஞர் சமுதாயத்துக்கும் பேரிடி என்றும் இதனை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் தலையீடுகள்
மேலும், இந்த சம்பவம் ஒரே ஒருவரைதாக்குவது மட்டும் அல்ல எனவும் இலங்கையில் சுதந்திரமான இளைஞர் தலைமைத்துவத்தையே தாக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
We strongly condemn the government’s act of politicizing the National Youth Services Council, which is a huge blow to the overall youth population in the country.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 3, 2025
The arrest of Poorna Sathyajith, former Chairman of the Kalutara District Youth Federation, for opposing this move…
இந்த நிலையில், அரசாங்கம் சிவில்சமூக அமைப்புகள் மற்றும் சுயாதீன இளைஞர் அமைப்புகளில் அரசியல் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ராஜபக்ச, “நாடு ஒரு ஜனநாயக, நியாயமான அமைப்பாக இருக்க வேண்டுமானால், இவ்வாறான தலையீடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்,” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
