முழங்காலில் கடும் வலி -வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்தார் பாப்பரசர்
Pope Francis
By Sumithiran
கத்தோலிக்கர்களின் புனித தந்தை
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களின் புனித தந்தையான பாப்பரசர் பிரான்சிஸ், முழங்காலில் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முழங்காலில் ஏற்பட்ட வலி
முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட பல வெளிநாட்டு பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டதாக வத்திக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 2-7 ஆம் திகதிகளில் கொங்கோ மற்றும் தெற்கு சூடான் பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால் அந்த பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கு பாப்பரசர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
