இலங்கையில் முட்டை விலை குறைவடைவதற்கான சாத்தியம்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விட குறைந்த விலையில் இலங்கையில் முட்டைகளை வழங்குவது தற்போது சாத்தியமாகியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய முட்டை 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் உள்ளூர் முட்டை 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் முட்டை உற்பத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
40 ரூபாவிற்கு குறைக்கப்படும்
இதேவேளை இலங்கையில் புத்தாண்டுக்குள் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவுக்கு குறைக்கப்படும் எனவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
அத்துடன் கடந்த பருவத்தில் இலங்கையில் முட்டை ஒன்றின் விலை ஏறக்குறைய 65 ரூபாய் வரை உயர்வடைந்தது.
தற்போது சந்தையில் ஒரு முட்டை 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |