சடுதியாக வீழ்ச்சியடைந்த பிரித்தானிய பவுண்டின் பெறுமதி...! வீழ்ச்சியடையும் பொருளாதாரம்

London Dollars
By Kiruththikan Sep 08, 2022 01:05 AM GMT
Report

பவுண்ட்

அமெரிக்க டொலருக்கு எதிராக பவுண்டின் பெறுமதி பாரிய சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1985ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு பவுண்டின் பெறுமதி பாரிய சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நேற்று புதன்கிழமை பிற்பகலில் ஸ்டெர்லிங் பவுண்ட் 0.64 வீதம் சரிந்து 1.145 டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை

சடுதியாக வீழ்ச்சியடைந்த பிரித்தானிய பவுண்டின் பெறுமதி...! வீழ்ச்சியடையும் பொருளாதாரம் | Pound Falls To Lowest Level Against Dollar

பிரித்தானிய பொருளாதாரத்திற்கான பலவீனமான பார்வை மற்றும் வலுவான டொலர் ஆகியவை ஸ்டெர்லிங் பவுண்ட் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இங்கிலாந்து வங்கி கூறியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் போர் தொடர்ந்ததால் இந்த ஆண்டு பிரித்தானியா மந்தநிலையில் விழுவதைத் தடுக்க முடியாது என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்தார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்படும் தாக்கத்தால் இந்த நிலை பெருமளவில் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் 2023 இறுதி வரை பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று இங்கிலாந்து வங்கி எதிர்பார்க்கிறது.

அதிகரித்த எரிசக்தி கட்டணங்கள்

சடுதியாக வீழ்ச்சியடைந்த பிரித்தானிய பவுண்டின் பெறுமதி...! வீழ்ச்சியடையும் பொருளாதாரம் | Pound Falls To Lowest Level Against Dollar

எரிசக்தி கட்டணங்களின் உயர்வைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத் திட்டத்திற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் வியாழன் அன்று விவரங்களை அறிவிக்க உள்ள நிலையில், வழக்கமான எரிசக்தி பட்டியல் சுமார் 2,500 பவுண்டாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ​​பொதுவாக ஒரு குடும்பத்தின் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் அக்டோபரில் 1,971 பவுண்டில் இருந்து 3,549 பவுண்டாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


YOU MAY LIKE THIS


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்