முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்...! அரசு அதிரடி நடவடிக்கை
காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் (sanath nishantha) உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காலமாவதற்கு முன்னர், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை உடனடியாக கையளிக்குமாறு, மனைவி சட்டத்தரணி சாமரி பெரேராவுக்கு பல தடவைகள் நினைவூட்டப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்ல வீட்டு வாடகை
இந்நிலையில், உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையை கூட அவர் செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையால் பங்களாவை உரிய முறையில் கையகப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சின் அதிகாரி ஒருவர், இந்த விடயங்களில் அமைச்சின் அதிகாரிகள் தன்னிடம் இருந்து போதிய ஆதரவைப் பெறவில்லை எனவும் கூறினார்.
அந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் தவிர, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய மற்றைய அனைத்து இல்லங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |