யாழ். பருத்துத்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம்
யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றகோரி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து இன்று (24) காலை 8:30 மணியளவில் பருத்தித்துறை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை , மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.
வியாபாரிகள் பல தடவை போராட்டம்
ஆனாலும் புதிய சந்தைக் கட்டிடம் போதிய இடவசதிகளோ அல்லது போக்குவரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொதுமக்கள் சந்தையை நாடுவது குறைவு.

ஆகையால் எமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் பல தடவை போராட்டம் நடாத்தி நகரசபை தவிசாளர் உள்ளிட்டோரிடம் மகஜர்களை கையளித்திருந்தனர்.
வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய நகரசபை அமர்வின் போது நிபுனர்குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆராய்ந்து முடுவெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
புதிய மரக்கறிச் சந்தை
ஆனாலும் இதுவரை வியாபாரிகளின்்கோரிக்கைகள் நிறைவேற்றுப்படாத விடத்து மரக்கறி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து போராட்டத்தை நடாத்திவருகின்றனர்.

ஆனாலும் சில மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறிச் சந்தை தமக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
செய்திகள் - பிரதீபன் மற்றும் பூ.லின்ரன்


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 21 மணி நேரம் முன்