சமையல்காரர், குடைகள்,வாகனங்கள் : ரணிலின் கோரிக்கையை நிராகரித்த அநுர
16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30 குடைகள், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வாகனங்கள்
தற்போதைய அரசாங்க விதிமுறைகளின்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வாகனங்கள் மட்டுமே வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் பொது நிதி மூலம் பராமரிக்கப்படுவதை தடுக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
குறைக்கப்படும் சலுகைகள்
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான வாகனங்கள் மற்றும் உத்தியோக பூர்வ இல்லம் உட்பட பல்வேறு சலுகைகளை குறைப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு அநுர தலைமையிலான அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |