கொத்து - ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றிவ் விலை அதிகரிப்பு
சமையல் எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து, நாளை (15) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகள், ஃபிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அச்சங்கம் இந்தத் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி, புதிய விலை மாற்றங்கள் பின்வருமாறு அமையவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விலை
சிற்றுண்டிகள் 05 ரூபாயால் அதிகரிக்கப்படுவமாபவும், பிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதிகளி 15 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமது உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |