அதிகாரிகளை ஏமாற்றி விட்டுத் தப்பியோடிய சிறைக் கைதி!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
காலியில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களை ஏமாற்றிவிட்டு சிறைக் கைதியொருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம்காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் இன்று காலை (25) நடைபெற்றுள்ளது.
கராப்பிட்டிய மருத்துவமனையின் ஒன்பதாவது மாடியில் அமைந்துள்ள வார்ட் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கைதியொருவரே தப்பிச் சென்றுள்ளார்.
தேடும் பணி
அவருக்குப் பாதுகாவலாக இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமையில் இருந்தபோதும் அவர்களை சூட்சுமமாக ஏமாற்றி விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தப்பி சென்ற கைதியை தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்