உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை - முழுமையான விபரம் வெளியீடு
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
By Kiruththikan
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும் பரீட்சை நிலையம் குறித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகள்
தேவைப்பட்டால் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி