கமநல சேவை நிலையத்திலிருந்த உரங்களை காணவில்லை - வீதிக்கிறங்கிய விவசாயிகள் ( படங்கள்)
Kilinochchi
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
1500 கிலோ கிராம் யூரியா மாயம்
கிளிநொச்சி அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ கிராம் யூரியா உரம் காணாமல் போயுள்ளதாகவும், அதன் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டகாரர்கள் யூரியா எங்கே, இராணுவத்திற்கு வழங்கப்பட்டதா, அதிகாரிகள் களவா?, எங்கே யூரியா, எவர் கைக்குப் போனது, எங்களுக்கு சேதனம் உங்களுக்கு யூரியா சீதனமா! எனப் பல பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.





மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி