அரச சேவையில் ஏற்படப்போகும் மாற்றம் : அநுர வெளியிட்ட அறிவிப்பு
நவம்பர் 14ஆம் திகதி மோசடியாளர்கள் மற்றும் ஊழல்வாதிகள் இல்லாத சுத்தமான நாடாளுமன்றத்தை உருவாக்கும் பெரும் முயற்சியில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anurakumara dissanayake)கேட்டுக் கொண்டார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பொதுச் சேவைகள் துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது பொதுக்கூட்டம் கட்டுநாயக்கவில் நடைபெற்றது.தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இது இடம்பெற்றது.
நாடு காட்டும் திசைகாட்டியில் "நாம் ஒன்றாக செல்கிறோம்" என்ற தொனிப்பொருளில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டை கட்டியெழுப்பும் அதிகாரம்
பொதுக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூய்மையான அரசியலை அங்கீகரிக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) இங்கு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |