கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான பணம் மோசடி - யாழ்ப்பாண பெண்கள் இருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்சம் ரூபா நிதி மோசடி செய்த இரண்டு பெண்கள் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் 23 மற்றும் 42 வயதுடைய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி