சீனாவால் உலகம் சந்திக்கப்போகும் மற்றுமொரு பேராபத்து
தன்னாட்டின் எல்லையாகவும் பாதுகாப்பு அரணாகவும் மிகப்பெரிய வரலாற்றையும் கொண்டு நிமிர்ந்து நிற்கும் சீனப்பெருங்சுவரின் தொடக்கப்புள்ளியாக இருந்த மன்னர் சின் ஷே ஹுவாங்.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த சீன நிலப்பரப்பை ஆட்சி செய்த பேரரசர் சின் ஷே ஹுவாங் சீனாவினுடைய எல்லைகளை விஸ்தரிப்பதற்க்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதிக ஆசைகளை கொண்டிருந்த பேரரசர் சாகாவரம் பெற்று வாழும் ஆசையோடு இருந்தது மட்டுமில்லாமல், அதற்கான மந்திர பாணத்தைத் தேட தமது அமைச்சர் ஒருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பினார்.
ஆயிரக்கணக்கான சுடுமண் உருவங்கள்
அந்த அமைச்சர் கடைசிவரை திரும்பவேயில்லை. அத்தோடு நின்றுவிடாமல் mercury sulphide உட்கொண்டு 10,000 ஆண்டுகள் பழங்கால மன்னர்கள் மற்றும் துறவிகள் வாழ்ந்ததாக கேள்விப்பட்டு பாதரசம் கலந்த பழரசங்களை உட்கொண்டு வந்தார். இதனால் 49ஆவது வயதில் மரணமடைந்தார்.
1974 ஆம் ஆண்டு சீனாவின் சாங்சி மாகாணத்தின் ஆயிரக்கணக்கான சுடுமண் உருவங்கள் நிலத்தின் அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருவங்கள் சின் ஷே ஹுவாங் இன் படை வீரர்கள் என்பதும் தெரியவந்தது.
உட்புறங்களில் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட குழிகளின் நடுவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தப் படை வீரர்களின் உருவங்கள் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்தவை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை வந்துள்ளது . மீசை உடைய முகங்கள் 10 அடிப்படை வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன.
குறித்த உருவங்கள் செப்டம்பர் 2007இல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
இந்த உருவச்சிலைகள் அமைத்ததும் பின்னால் உள்ள கதைகளையும் ஆச்சரியமான பல விடயங்களையும் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
சின் ஷே ஹுவாங் தன் சாகாவரம் கிடைக்காமல் காலம் முழுதும் பேரரசராக வாழ இயலவில்லை. இதனால் இறப்புக்குப் பிறகும் ஆட்சி செய்யும் எண்ணத்தோடு மண்ணுக்கடியில் இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட இந்த 8000 படைவீரர் உருவங்கள் தனக்காக உருவாக்க ஆரம்பித்த கல்லறையைச் சுற்றி, காவலுக்கு நிறுத்தி ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துள்ளார்.
இன்றுவரை சின் ஷே ஹுவாங் பேரரசரின் கல்லறை தொடர்ந்து மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்தக் கல்லறையை திறந்தால் மிகப்பெரிய அழிவு உலகிற்கு ஏற்படும் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மண்ணுக்கடியில் இருக்கும் இந்தக் கல்லறைத் தோட்டத்தை தோண்டி எடுக்கும் முயற்சியின் போது சுடுமண் உருவங்கள் மீது பூசப்பட்டு இருந்த அரக்கு, காற்று பட்ட 15 நொடிகளில் உதிர்ந்து போனது இதனால் இந்தக் கல்லறை திறக்கப்பட்டால் காற்று உள்ளே புகுந்தால் சீர் செய்ய முடியாத அளவுக்கு சேதங்கள் உண்டாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மன்னரின் கல்லறையைச் சுற்றி அதிகளவு பாதரசம்
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாளரது கூற்றுப்படி கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள மன்னரின் கல்லறையைச் சுற்றி பாதரசம் அதிக அளவு ஊற்றப்பட்டுள்ளது.
அவர் கூறியதுபோல் தற்போது மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளும் அந்த இடத்தில் இருக்கும் மண்ணில் மிகவும் அதிகமான அளவில் பாதரசம் இருப்பதை உறுதி செய்கின்றன. இருப்பினும் அதிகமான பாதரசம் எப்படி கிடைத்தது என்பது வெறும் அனுமானமாகவே உள்ளது .
இந்தப் பாதரசம் அதிகமாக இருக்குமானால் அந்த இடத்திற்கு நுழைவது ஆபத்தானதாக அமைந்துவிடும். அத்தோடு கல்லறையின் நுழைவாயிலில் இருந்து பேரரசரின் உடல் இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதையில் இயந்திர அம்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக, அந்த அம்புகள் இயங்கமுடியாத நிலையிலா அல்லது குரோமியம் பூசப்பட்டு நன்றாக இருக்கின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
