"இதை நீ படிக்கும்போது" -பேரனான வில்லியமிற்கு ராணி எழுதிய கடிதம்
பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் தனது பேரனும் வேல்ஸ் மாகாணத்தின் இளவரசருமான வில்லியமிற்கு எழுதிய பழைய கடிதம் ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த கடிதம் ரியல் றோயல் மெயில் எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இதைத் திறப்பதில் மகிழ்ச்சி அடைவாய்
அதில்,"வில்லியம், நீ ஒவ்வொரு நாளும் இதைத் திறப்பதில் மகிழ்ச்சி அடைவாய் என்று நம்புகிறேன், பாட்டி" என கைப்பட எழுதியிருக்கிறார் இரண்டாம் எலிசபெத்.
இந்த கடிதம் 1997 ஆண்டுகாலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கடிதத்துடன் கலண்டர் ஒன்றும் இளவரசர் வில்லியமிற்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் ஏலத்திற்கு வந்த இந்த கடிதத்தை முன்னாள் இளவரசி டயானாவின் ஊழியர் ஒருவர் வாங்கியதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய கடிதத்தின் புகைப்படம்
"William, I hope you enjoy opening this each day, Granny"- A card written in the hand of #QueenElizabethII & sent to the young #PrinceWilliam obviously along with an advent calendar. It was purchased from a former employee of #PrincessDiana. pic.twitter.com/qo6j882yUb
— Royal Household Mail 🇬🇧 🇺🇦 (@RealRoyalMail) October 25, 2022
இந்நிலையில், இரண்டாம் எலிசபத் தனது பேரனுக்கு எழுதிய பழைய கடிதத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.