யாழில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்று கூடிய மாபெரும் கூட்டம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரிக்கும் பொதுக்கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டமானது, நேற்றையதினம் (16) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க.அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரை ஆற்றியுள்ளனர்.
கட்டமைப்பு உருவாக்கம்
அதன் போது உரையாற்றிய அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக திரட்டுவதற்கு ஒரு பயிற்சிக் களமாக பயன்படுத்துவது தான் இந்த தேர்தல். அந்த அடிப்படையில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பது இலங்கை மக்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை.
அதில் வெளியிட இருக்கும் அரசுகளின் நலங்களும் சம்பந்தப்பட்டிருக்கும் அப்படி பார்க்கப்போனால் அரசின் தலைவராக வரவேண்டும் என்பதை வெளிச்சத்தில் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல் களம் இது.
யார் வந்தால் நல்லது யார் வந்தால் கூடாது இந்த அடிப்படையில் வெளிக்காட்டிகளின் நலன்களும் சம்பந்தப்பட்ட இந்த தேர்தல் களத்தில் ஒரு சிறிய மக்கள் கூட்டமாகிய நாம் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி எல்லோருடைய நிம்மதியையும் கொடுத்திருக்கின்றோம்.
ஒரு சிறிய மக்கள் கூட்டமாகிய நாம் ஒரு பொதுக்கூட்டம் உருவாக்கினோம் அந்த பொதுக் கட்டமைப்பு இலங்கை தீவின் நவீன வரலாற்றில் ஒரு புதுமை ஒரு கட்சியின் கட்சிகளும் ஒரு தமிழ் மக்கள் அமைப்பும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைக்கப்படுகின்ற அமைப்பும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்பது தமிழ் தேர்தல் வரலாற்றில் இலங்கைத் தேர்தல் வரலாற்றில் இதுதான் முதல் தடவை.
இதற்கு முன் தமிழ் மக்கள் பேரவை உங்களிடம் இருந்தது. ஆனால் அங்கே கட்சிகளும் சிவில் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதியிருக்கவில்லை இரண்டு தரப்பு இணைந்து ஒரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை.
அரியநேத்திரனுக்கு ஆதரவு
ஆனால் அதுவும் தமிழ் மக்களின் மகத்தான பரிசோதனைகளில் ஒன்று. தமிழ் மக்கள் பேரவை இல்லாமல் போய் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சென்றிருக்கின்றன.
இப்படி ஒரு கட்டமைப்பு வர 8 ஆண்டுகள் சென்று இருக்கின்றன. மூன்றாவது புலம்பெயர் அலை ஒன்று தொடங்கி இருக்கிறது, தமிழ் மக்கள் ஒரு நிமிடமான ஆயுத போராட்டத்தை நடத்திய மக்கள் எங்களுக்கென்று நூதனமான இயல்புகள் ஒன்று ஈழத் தமிழர்களுக்கு என்று நாங்கள் இன்றைக்கு பல கூறுகளாக சிதறிப் போய் இருக்கலாம்.
நாங்கள் அபிஷேகங்களையும் அற்புதங்களையும் செய்த மக்கள் எங்களுக்கென்று நூதனமான குணங்கள் உண்டு. உலகிலேயே சித்தர் பாரம்பரியம் எனப்படுவது நதிகளையும் மலைகளையும் காடுகளையும் சார்ந்து தான் வரும் உலகிலேயே தனக்காக இல்லாமல் தனது மக்களுக்காக வாக்கு சேர்க்கும் ஒரு வேட்பாளரை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?
உங்களுக்காக உங்களை புது வேட்பாளர் என்ற விடயம் இலங்கை தீவின் தேர்தல் வரலாற்றிலும் இந்த பிராந்தியத்தின் ஜனநாயக வரலாற்றிலும் ஒரு புதுமை அரசாங்கம் திறந்து விட்டிருக்கும் ஒரு தேர்தல் தளத்தை ஒரு சிறிய மக்கள் கூட்டம் செயல் முன்னேற்போர் ஆக்டிவாக அணுகுவது என்பது முதலாவது புதுமை.
அந்த தேர்தல் தளத்தை தேர்தலாக அணுகாமல் மக்களை திரட்டும் பில்டிங் எக்சர்சைஸ் மக்களை திரட்டும் ஒரு பயனுகையாக பயில்வது என்பது இரண்டாவது புதுமை.
ஒரு வேட்பாளர் தனக்கு வாக்கு சேர்க்காமல் தனது மக்களுக்காக வாக்கு சேர்த்தது என்பது மூன்றாவது புதுமை.
பேரரசுகளின் நலன்கள் சம்பந்தப்படும் ஒரு களத்தில் ஒரு சிறிய மக்கள் கூட்டம் குனிந்து முடிவெடுத்து கிறுக்குத்தனமாக ஒரு தேர்தலை எதிர்கொள்வது என்பதில் நான்காவது புதுமை.
ஒரு புது புதுமையான ஆயுதப் போராட்டத்தை படைத்த அதே மக்கள் மீண்டும் படத்தில் ஒரு புதுமையை படைக்கிறார்கள் எனவே உங்களுடைய வாக்குகளை அரியநேத்திரனுக்கு வழங்குங்கள்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |