தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!
கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மதுவரிச் சட்டத்திற்கு முரணான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
கண்டியில் (Kandy) மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இருவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதியமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 39 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியல் நோக்கம்
அதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், கலால் வரிச் சட்ட விதிகளைத் தவிர்த்து எதேச்சதிகாரமான மற்றும் அநீதியான முறையில் அந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |