சட்டமா அதிபரை நீக்க ரணில் கொண்டு வந்த சட்டமூலம்!
அரசியலமைப்பின் பிரகாரம் ஏனைய அரச அதிகாரிகளைப் போலவே சட்டமா அதிபருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் நேற்று (26.01.2026) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சட்டமா அதிபரை நீக்கும் செயல்முறை தொடர்பில் நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் நலன்களின் அடிப்படையில் சட்டமா அதிபரை நீக்குவதைத் தடுக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2001 ஆம் ஆண்டில் ஒரு விசேட சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்தார்.
சட்டமூலம்
இந்த சட்டமூலம் சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகிய இரு பதவிகளை மாத்திரமே உள்ளடக்கியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு சட்டமா அதிபரை நீக்குவதற்கு, நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய விஜயதாச ராஜபக்ஷ, பின்னர் ஒரு முறையான விசாரணை நடத்தப்பட்டு அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சட்டம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்து சில தரப்பினருக்கு சிக்கலாக இருப்பது தவறு அல்ல தற்போதைய சட்டமா அதிபர் தொடர்பில் கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அல்ல, துறையின் மிக மூத்த அதிகாரியாகவே தான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின்படி அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு அரசியல் லேபள்களை இணைப்பது முழுத் துறையையும் அவமதிப்பதாகும். சட்டமா அதிபர் சட்டத்தை செயல்படுத்தவில்லை அல்லது தவறாகச் செயல்பட்டால், அவருக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுவதற்குப் பதிலாகப் பின்பற்றக்கூடிய சட்ட வழிகள் உள்ளன.” என தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கான கோப்புகள் உள்ளதாகவும் மூத்த அதிகாரிகள் குழுக்களால் அவற்றை ஆய்வு செய்து சட்டமா அதிபருக்கு அனுப்பும் ஒரு அமைப்பு உள்ளதாகவும், இது மிகவும் முறையான ஒரு செயல்முறை எனவும் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
You May Like This......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |