பசில் ராஜபக்சவை கணக்கில் எடுக்காத ரணில் : வெளிவந்த புதிய தகவல்
‘பசில் ராஜபக்ச(basil rajapaksha) கூறுவதை அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) கவனத்தில் கொள்ளவில்லை' என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(udaya gammanpila) தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவின் விருப்பம்
அதிபர் தேர்தலில் பெற்ற அதீத தோல்வியின் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த பசில் விரும்புகிறார்.
ஆனால் நாட்டின் பார்வையில், அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே நாட்டுக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய கேடு.
எனவே பசிலின் ஆசை நிறைவேறவில்லை என்பதை ரணிலுடன் அவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
பசில் கூறுவதை கவனத்தில் கொள்ளாத ரணில்
பசில் ராஜபக்ச கூறுவதை அதிபர் ரணில் விக்ரமசிங்க கவனத்தில் கொள்ளவில்லை.
அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட 10 பெயர்களின் பட்டியல் 2022 ஒக்டோபரில் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த பத்து பேரும் அமைச்சரவையில் இல்லையென்றால் எதிர்க்கட்சியில் அமர்வார்கள் என்றார்கள். நீங்கள் போய் எதிர்க்கட்சியில் அமர்ந்நீதிகளா இல்லை.
மொட்டுவின் உண்மையான தலைவர்
இன்று மொட்டுவின் உண்மையான தலைவர் பசில் ராஜபக்ச அல்ல ரணில் விக்ரமசிங்கவே. மொட்டுவில் உள்ள பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருடன் உள்ளனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |