பிரதமர் நியமனம் - ரணில் சபாநாயகருக்கு விடுத்த அறிவித்தல்
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
பிரதமர் நியமனம்
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடியவரை பிரதமராக நியமிக்குமாறு, பதில் அதிபரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
பிரதமரின் ஊடக பிரிவு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்க உடன்பாடு
கடந்த திங்கட்கிழமை (11) பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது, சர்வகட்சி அரசாங்கம் அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன், அந்த அரசிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம் என அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாக பிரதமரின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
