ஆளும் கட்சி எம்.பிக்களுக்கு ரணில் விடுத்த உத்தரவு
Ranil Wickremesinghe
By Vanan
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தத்தமது கிராமங்களுக்குச் சென்று வழமை போன்று அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் வைத்து அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமம் தோறும் சென்று பணியாற்றக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அரசியல் நடவடிக்கை
இந்த நிலையில், மக்கள் மத்தியில் சென்று அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
உலக வங்கியின் உதவியுடன் சமூக நலன்புரி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அது பெரும் நிவாரணத்தை வழங்கும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி