ரணிலின் பிரித்தானிய விஜய விசாரணை குழு! செலவுகள் குறித்து வலுத்துள்ள குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய பயணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட செலவுகளை வெளியிட இலங்கை காவல்துறை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த செலவு தொடர்பான தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு கோரப்பட்ட தகவல்களை வழங்குவது தொடர்புபட்ட அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் விசாரணைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனக்கூறி தகவல்களை வழஙக மறுக்கப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழா
ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக பொது நிதியில் இருந்து 166 இலட்சம் ரூபாயை செலவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, குறித்த விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், குறித்த விசாரணை அதிகாரிகள் பட்டமளிப்பு விழா இடம்பெற்ற வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருக்கவில்லை.
இந்நிலையில் தான், தற்போதைய அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் கூறி, பல்வேறு தரப்பினரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட பல தகவல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You May Like This....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |