ரணிலுடன் இணையத் தயார் - சஜித் அணி எம்.பி பகிரங்க அறிவிப்பு
SJB
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Government Of Sri Lanka
By Sumithiran
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அதிபராக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தமது கட்சியின் முன்னாள் தலைவர் எனவும் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து புதிய வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதிபர் தேர்தல் வரையில் அந்த வேலைத்திட்டத்தில் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி