சீன மீன்பிடிக் கப்பல் விபத்து - 14 சடலங்களை மீட்டுள்ள இலங்கை கடற்படையினர்!
சீனாவின் மீன்பிடிப் படகொன்று கடந்த 16ஆம் திகதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது, இப்படகில் 17 சீனர்கள், 17 இந்தோனேஷியர்கள், 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர்.
இந்தநிலையில், இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலான Lu Peng Yuan Yu 028 இன் மீட்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினரும் உதவி வருகின்றனர்.
குறித்த மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் 14 சடலங்களை மீட்டுள்ளனர்.
மீட்புப் பணி
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கு அமைய கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான SLNS விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், இதற்கு முன்னதாக 2 சடலங்களை மீட்டுள்ளனர்.
கடலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்கள் தற்பொழுது மீட்கப்பட்டுள்ளது.
அதேசமயம், விபத்து இடம்பெற்ற நேரம் இந்த மீன்பிடிக் கப்பலில் 39 பேர் இருந்ததாக கூறப்பட்டது.
