குறைவடையவுள்ள அப்பியாசக் கொப்பிகளின் விலை
எதிர்வரும் மாதம் முதல் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து அப்பியாசக் கொப்பிகளின் விலையும் 18 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) சலுகையின் பலனை மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த மாதம் முதல் சந்தையில் உள்ள அனைத்து அப்பியாசக் கொப்பிகளும் 18 சதவீத விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படும் என தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்த நடவடிக்கை
இந்த விலைக் குறைப்பானது எதிர்வரும் புதிய தவணைப் பாடசாலை ஆரம்பத்திற்கு முன்னதாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், சலுகை விலையில் அப்பியாசக் கொப்பிகள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |