795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக இந்நாட்டில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி கட்டுபாடுகள்
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசு கடந்த 20 திகதி வெளியிட்டிருந்தது.
இதன்படி, சுற்றுலாத் துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிசி டீவி மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுபாடுகள் நீக்கப்பட்டன.
You May Like This