இங்கிலாந்தில் அகற்றப்படுகின்றன சீன கண்காணிப்பு கமராக்கள்
United Kingdom
China
Camera
By Sumithiran
இங்கிலாந்தில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கமராக்களை அகற்றுவதற்கான யோசனையை அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கமராக்களை அகற்றுவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசித்து வந்தது.
முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள
அதன்படி நாட்டின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கமராக்களை அகற்றுவதற்கான யோசனையை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அச்சுறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு
அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதேபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விநியோகஸ்தர்களை தடை செய்யவும் இந்த யோசனை வழி செய்யும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்