தொடரும் திரிபோஷா சர்ச்சை - அமைச்சர் வெளியிட்ட தகவல்
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மறுத்துள்ளார்.
திரிபோஷா கையிருப்பில் அஃப்லடொக்சின் என்ற நச்சுப்பொருள் இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து ஆதாரமற்றது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விநியோகிக்கப்பட்ட சில நச்சுத் திரிபோஷா வாபஸ் பெறப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உபுல் ரோஹனவிடம் விளக்கம் கோரல்
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்புக்கள் என அழைக்கப்படும் பொருட்கள் மீளப் பெறப்படுவதாக தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் குறித்து விளக்கமளிக்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரபோஷாக்களில் அஃப்லடொக்சின் எனும் நச்சுத்தன்மை இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.