தமிழீழ விடுதலைக்காக என் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்! பிரியாவிடை உரையில் வைகோ
தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றில் இன்று பிரியாவிடையின்போது அவர் இதனை வௌழப்படுத்தியுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர்,
“மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை.
பணிக்காலம் நிறைவு
நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன்,
இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
ஈழத் தமிழர்களின் துயரம் மற்றும் சிங்கள அரசாங்கத்தால் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் குறித்து 13 முறை கவன ஈர்ப்புத் தீர்மானத்தை இந்த அவையில் கொண்டுவந்து உரையாற்றியிருக்கிறேன்.
இதன் தொடர்ச்சியாக 19 மாதங்கள் 'பொடா' சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான்.
தமிழீழ விடுதலை
‘மிசா' சட்டத்தின் கீழ் 12 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டேன். மொத்தத்தில், நான் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.
பொடா சட்டத்தின் கீழ், எனது உணர்வுகளையும். நிகழ்வுகளையும் ‘சிறையில் விரிந்த மடல்கள் (From the portals of Prison)' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதினேன்.
இந்நூல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் செப்டம்பர் 3, 2004 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
இப்போது, நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
