கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு - யாழில் சம்பவம்
Sri Lanka Police
Sri Lanka
Death
By pavan
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட நவாலி வடக்கு பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (11) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நவாலி வடக்கு கிணறொன்றில் வயோதிபர் ஒருவர் சடலமாக காணப்பட்டதை பிரதேசவாசிகள் அவதானித்து மானிப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினார்.
மேலதிக விசாரணை
கணேசலிங்கம் மாணிக்கம் (70 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்