ரணிலின் புண்ணியத்தால் நிரம்பி வழியும் நீர் நிலைகள்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்தால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிரம்பி வழியும் நீர் நிலைகள்
“அதிபர் ரணில் விக்ரமசிங்க கௌரவமான அதிபர் அதனால்தான் விக்டோரியா, ரந்தம்பே, ரந்தெனிகல, மதுருஓயா, இங்கினிமிட்டிய ஆகிய அனைத்து நீர்த்தேக்கங்களும் 30 வருடங்களுக்குப் பின்னர் முழுமையாக நிரம்பியுள்ளன.
இலங்கைக்குத் தேவையான நீர் வளம் கிடைத்துள்ளது, உணவு வளத்தில் வெற்றிபெற இயற்கை உறுதுணையாக இருக்கிறது. என தெரிவித்தார்."
மூளையில் கோளாறு
அத்துடன் ரணில் விக்ரமசிங்க தவிர வேறு எவராவது அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்களாயின் அவர்களுக்கு மூளையில் கோளாறு இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஒரு கோடி வாக்குகளை வழங்கி நாம் ரணில் விக்ரமசிங்கவை அதிபராக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |