முச்சக்கர வண்டி கட்டணங்கள் திருத்தம்
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 3ஆம் திகதி முச்சக்கர வண்டி கட்டண மீளாய்வுக் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், கட்டண திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்களின் படி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 100 ஆகவும், இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 85 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த புதிய கட்டணங்கள், மீட்டர் டக்சிகள் கட்டாயமாக பின்பற்றவேண்டுமென்றும், திருத்தப்பட்ட கட்டணங்கள் முச்சக்கர வண்டியின் முன் இடது பக்கத்தில் பயணிகள் பார்க்கும்படி தெளிவாகக் காட்டப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்களுக்கு அமைவாக அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |