வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியினால் ஆபத்து..!
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும் பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை உண்டாக்கும்
அலுவலகத்தின் ஆய்விற்கமைய, நாட்டில் பயன்படுத்தப்படும் அரிசியில் ஆர்சனிக் அளவு 0.2 சதவீதம், ஈயம் 0.2 சதவீதம், பாதரசம் 0.1 சதவீதம், செலினியம் 0.3 சதவீதம் உள்ளடங்குகின்றது.
இவை அனைத்தும் கனரக உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உள்ளூர் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 சதவீதம் ஈயம், 26 சதவீதம் காட்மியம், 20 சதவீதம் பாதரசம், 47 சதவீதம் செலினியம் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
